கர்நாடகாவில் ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு உரிமை உண்டு- ஆளுநர்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கு ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமிக்கு உரிமை இருப்பதாக ஆளுநர் வாஜுபாயி வாலா அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மயுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், இந்த நிலை தலைகீழாக மாறி பாஜக-வின் பெரும்பான்மை தொகுதி முன்னிலை எண்ணிக்கை திடீரென சரிவை சந்தித்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ள காங்கிரஸ் மேலிடம், ஜேடிஎஸ் நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தியது. இதில், இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டால் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆளுநர் வாஜுபாயியை சந்தித்த குமாரசாமி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கு, பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆளுநரின் இந்த அறிவிப்பால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியும், காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். முன்னதாக, வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவு அறிவிக்கப்படாமல் ஆளுநரை சந்திக்க குமாரசாமிக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என ராஜ்பவன் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *