ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசும் பாஜக – குமாரசாமி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

100 கோடி ரூபாய் தருகிறேன் அமைச்சர் பதவி தருகிறேன் என தங்கள் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஆசை காட்டுவதாக மஜத தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.மஜத கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜகவிற்கு எங்கு இருந்து கருப்பு பணம் வந்தது என்றும், வருமான வரித்துறை என்ன செய்கிறது என்று கேள்வி எழுப்பினார். பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி என்றும் கூறினார். 2004- 2005ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டணி வைத்தன் மூலம் தனது தந்தைக்கு கரும்புள்ளி ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த கரும்புள்ளியை துடைக்க கடவுள் தனக்கு வாய்ப்பு அளித்துள்ளதாகவும், எனவே காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *