தூத்துக்குடியின் துயரம் தீருமா?- சிறப்பு செய்தியாளர் குரும்பூரான்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • Anti-sterlite protests in Tuticorin
 • tuti4jpg
 • tuti2jpg
 • tuti3jpg
 • WhatsApp Image 2018-05-22 at 5.11.50 PM
தூத்துக்குடியில் எது நடைபெற கூடாதோ அது நடைபெற்று முடிந்து விட்டது. இல்லை இன்னும் தொடர்கிறது.ஏன் இப்படி ஒரு சம்பவம் நிகழ வேண்டும் என ஒரு கேள்வி எழுகிறது. இந்த துப்பாக்கி சூடு தேவையா ? உயிர்களை பலி வாங்குவது என்ன அவ்வளவு சாதாரணமாகி விட்டதா? உயிருக்காக போராடுகிறோம். மாசுவால் மாசடைந்து மருத்துவமனைகளில் மரணத்தை சுவாசித்து கொண்டு இருக்கிறோம். எங்களின் ரணத்தை ஆற்றுங்கள் என்றால் அதற்கு பரிசுதான் துப்பாக்கி குண்டுகளோ…? 1994- முதல் போராடி வருகிறோமே எங்களின் குரல் உங்களின் செவிகளில விழவில்லையா என தூத்துக்குடி மக்கள் கூக்குரலிடுகின்றனர்.யாருக்காகவோ தமிழனை தமிழனே காக்கி சட்டை அணிந்து அழிக்க வேண்டுமா? இதற்குதான் பலியானவர்களின் பெற்றோர் அவர்களை ஈன்றார்களா? குறிவைத்து தாக்கி அழித்துள்ளீர்கள் என தகவல்கள் மெய்பிக்கப்பட்டு வருகிறதே… இளம் தலைமுறையினர்தான் இந்த நாட்டை காக்க வேண்டும் என நீங்கள் மேடைகளில் முழங்குவது வெத்து வேட்டு என்பதை அல்லவா நிரூபித்துள்ளீர்கள் 17 வயது மாணவியை மரணக்குழியில் தள்ளி விட்டீர்கள் அவள் இருந்தாள் இந்த நாட்டின் நல்லதலைவராக உருவாகி இருக்க மாட்டாளா? உள்ளங்களை தொட்டு கேளுங்கள்… இளைஞர்களை தலைமைக்கு வர உங்களின் ஜனநாயகம் அனுமதிக்காது என்றால் அதற்கு பெயர் என்ன? மக்களின் துயரத்தை போக்குவீர்கள் என நம்பித்தானே உங்களுக்கு வாக்குகள் வழங்கப்பட்டது. அதற்கு நீங்கள் ஜனநாயகம் என்ற போர்வையில் குண்டுகளையும் , லத்திகளையும் வைத்து விரட்டி அடித்தால் விடை கிடைத்து விடுமா? ஒரு மக்கள் போராட்ட களத்தை எப்படி சந்திக்க வேண்டும் அவர்களை அழைத்து பேசி சுமுக தீர்வு காண இயலாதா? அப்படி இயலாது என்றால் அந்த இயலாமைக்கு உங்களை தள்ளி விடுவது எந்தவகையான நிகழ்வுகள்.நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *