ஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்

Comments (0) ஆன்மிகம், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இஸ்லாமியர்களிடையே ஏகத்துவத்தை பரப்புவதற்கும் . மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் புதிய இயக்கம் ஒன்று உருவாகியுள்ளது. சமூக ஒற்றுமை சங்கம் என்ற பெயரில் தனது பணியை தொடங்கியுள்ள இந்த அமைப்பின் பணிகளில் ஏகத்துவ பணி இன்றியமையாத ஒன்று ஆகும். ஏகத்துவத்தை பரப்பும் பணியில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், மக்களின் உரிமைகளுக்காக போராடவும் இந்த புதிய அமைப்பு சூளுரை ஏற்றுள்ளது. இந்த சமூக ஒற்றுமை சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைப்பின் தலைவராக பதுருல் ஆலம் , மாநில பொதுச்செயலாளராக வண்ணை சுல்தான், மாநில பொருளாளர் ரபீக் , துணை தலைவராக கமருதீன் , துணைபொதுசெயலாளராக சம்சுதீன், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து விரைவில் மாநில முழுதும் உள்ள மாவட்டங்க ளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலம் தழுவிய ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக புதிய அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *