தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் எதுவும் இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நுண்கதிரியல் துறையில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஆஞ்சியோகிராஃபி கருவி மற்றும் 3 சி.டி.ஸ்கேன் கருவிகளையும் திறந்துவைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் ஏதும் இல்லையென்றும், வைரஸ் தாக்குதலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *