துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மேலும் 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த 7 பேரின் உடல்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி மறு உடற்கூராய்வுக்குப் பின் ஏற்கெனவே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டன. எஞ்சிய 6 பேருக்கான உடற்கூராய்வு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் வினோத் சர்மா தலைமையில் அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வை மேற்கொண்டனர். மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகள் உடற்கூராய்வு நடைமுறைகளை பார்வையிட்டனர்.6 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மணிராஜ், கிளாஸ்டன் ரஞ்சித், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தோனி செல்வராஜ் என்பவரின் உடலை வியாழன் காலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை நடைபெற்றதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளில்லா விமானம் மூலம் அப்பகுதி முழுவதும் போலீஸார் கண்காணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *