புதியதலைமுறை மீதான வழக்கு திரும்ப பெறமுடியுமா-முதலமைச்சர் விளக்கம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனியார் தொலைகாட்சி மீது போடப்பட்ட வழக்கு குறித்த விசாரணை முடிவில்தான் வழக்கை திரும்ப பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் எழுந்த பிரச்சனையையடுத்து,இயக்குநர் அமீர் மற்றும் நிகழ்ச்சி நடத்திய தனியார் தொலைக்காட்சி மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தனியார் தொலைகாட்சி மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை முடிவில்தான் வழக்கை திரும்ப பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *