சென்னை சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி- முதலமைச்சர்

Comments (0) அரசியல், சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி என்று முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில், 8 வழிச்சாலை மக்களுக்கு சோறு போடுமா என்ற திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமியின் கேள்விக்கு அனைவரின் பயன்பாட்டுக்கு தான் 8 வழிச்சாலை அமைப்பதாக முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்தார். சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை வனப்பகுதிக்கு பாதிப்பில்லாமல் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். ஒரு ஹெக்டர் நிலத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாகவும், குறைந்த எண்ணிக்கையில் தான் மரங்கள் வெட்டப்படுவதாகவும் கூறினார். திமுக கோட்டை விட்டதை மத்திய அரசிடம் அதிமுக அரசு போராடி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தனியாருக்காகத் தான் திமுக ஆட்சியில் சாலைகள் அமைக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *