தேவாரம் அருகே காட்டுயானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தேவாரம் அருகே காட்டுயானை மிதித்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள தோட்டத்தில் முதியவர் சேகர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு முதியவர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த தேவாரம் போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை ஒன்று முதியவரை தாக்கியது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *