ஸ்டெர்லைட் விரிவாக்கம் ரத்து செய்க- மாசுகட்டுப்பாட்டு வாரியம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது யூனிட் கட்டுமான பணி மேற்கொள்ள கடந்த 2016-ம் ஆண்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *