ஜாக்டோ ஜியோ போராட்டக்காரர்களுக்கு உடல்நலக்குறைவு

Comments (0) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் இரண்டு பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதியக் குழு பரிந்துரையின் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சங்கத்தினர், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் டெய்ஸி மற்றும் ஜாக்டோ-ஜியோ நிதிகாப்பாளர் மோசஸ் ஆகியோர் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டுள்ளனர். இதனையடுத்து, இருவரும் அருகில் உள்ளி கோஷா அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *