பிறந்தநாள் வேண்டாம்- ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கோலிவுட் திரையுலகின் வசூல் மன்னன் என போற்றப்படுபவர் நடிகர் விஜய். இவரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது ரசிகர்கள் ரசிகர் மன்றங்களின் சார்பாக ஏதாவது ஒரு நற்காரியங்களை பொது மக்களுக்கு செய்வது வழக்கம். அது போல், இந்த ஆண்டும் அவரின் 44வது பிறந்தநாளை சிறப்பான முறையில் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சில திட்டங்களை செய்து வைத்திருந்தனர். ஆனால் கடந்த வாரம் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்றுஆதரவு தெரிவித்திருந்த விஜய் தூத்துக்குடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்காக பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஒருபக்கம் சோகத்தை அளித்தாலும், தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்காக என்பதால் அவர்களும் இந்த முடிவை வரவேற்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *