தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் அமர்வு

Comments (0) Uncategorized

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் அமர்வு தைவான் நாட்டின் தலைநகரமாம் தைபேயில் உள்ள தேசிய தைவான் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தைவான் வாழ் தமிழ் ஆர்வலர்கள், ஆரயாச்சி மாணவர்கள் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.விழாவில் சிறப்புரையாக பட்டிமன்றம் புகழ் திரு. ராஜா அவர்கள் “கம்பனின் கவி” என்ற தலைப்பில் காணொளி வழியாக பேசினார். கம்பரமாயனத்தில் கம்பனின் கவி ஆளுமையை பற்றி விளக்கும் போது விசுவாமித்திரர் ராமனின் வில்திறனை பற்றி ஜனகரிடம் கூறும் பாடலில் ஒன்பது இடத்தில் ‘உரு’ என்ற வார்த்தையை உபயோகித்திருப்பார். ஒன்பது இடத்திலும் வெவ்வேறு அர்த்தம் வரும். கம்பராமயாணத்தை ஒவ்வொருமுறை வாசிக்கும் பொழுதும் ஓவ்வொரு பரிணாமத்தை நமக்கு கொடுக்கும், கம்பரின் தமிழ் ஆளுமையை புரிந்துகொள்ள கம்பராமாயணம் படியுங்கள் என்று கூறினார்.நிகழ்வில் முனைவர் வனிதா நித்தியானந்தம் பேசும் போது, தற்பொழுது நாம் அனைவரும் இணையத்தினை கண் போன்று பாவித்து இவ்வுலகத்தை பார்க்கிறோம். அப்படிப்பட்ட இணையத்தில் அறிவியலானது முழுமையாக தமிழில் இல்லை. தற்பொழுது ஒரு சில முயற்சிகள் நடந்துகொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அடிப்படை அறிவியல் பற்றியே இருக்கிறது. தமிழை பிரதானமாக பேசக்கூடிய மக்களுக்கு புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி புரியக்கூடிய அளவில் தமிழில் இல்லை. தற்பொழுது தைவானை எடுத்துக்கொண்டால் “ஜீன் ஆன்லைன்” என்ற பத்திரிக்கையானது தற்பொழுதைய அறிவியல் தகவல்களை சீன மொழியில் கொடுக்கிறது. அது போன்று தமிழில் அறிவியல் தகவலகள் வெளிவரவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.அடுத்து “தென்கிழக்காசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் தாக்கம்” என்ற தலைப்பில் முனைவர். சுப்புராஜ் திருவெங்கடம் அவர்கள் பேசும் போது, தமிழ் மற்றும் தமிழர்களின் கலாச்சரத்தின் தாக்கமானது தென்கிழக்காசிய நாடுகளில் 17 நாடுகளில் இருந்ததாக பாடல் சொல்கிறது என்று கூறினார். தற்போதைய பர்மா, மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் எச்சங்களாக கிடைத்துள்ள சான்றுகளை அனைவருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *