எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். யோகா தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ இடங்களுக்கு தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மத்திய அரசுடன் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். சேலம் தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *