புதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது

Comments (1) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

புதுக்கோட்டையில் விவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி, 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சோழகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ், புதுக்கோட்டையில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் விளை நிலத்தை அடமானம் வைத்து 14 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதில் 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவரது கணக்கில் வரவாகி உள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் விவசாயி ராமதாஸ் கேட்ட போது, விரைவில் முழுத்தொகையும் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், 5 மாதங்களாகியும் முழுத்தொகையும் கிடைக்காததால் சந்தேகமடைந்த விவசாயி ராமதாஸ், குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வங்கியின் வேளாண் பிரிவு மேலாளர் பிரவீன்குமார், உதவி மேலாளர் பேரெழிலன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து விவசாயியின் கடனை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீன்குமார், பேரெழிலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வங்கி ஊழியர்கள் ராம்குமார், பிரபாகரன், மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

One Response to புதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது

 1. Helpwithmath says:

  Thank you for your blog post.Really thank you! Awesome.http://boxermath.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *