சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை: தலைவர்கள் பாராட்டு

Comments (2) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது சிறுவன், செஸ் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ரமேஷ்பாபு- நாகலட்சுமி தம்பதிகளின் இளைய மகன் பிரக்ஞானந்தா. சென்னை வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தாவிற்கு, சிறு வயதிலிருந்தே செஸ் விளையாடுவதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.இதனை அறிந்த அவரது தந்தை, சிறுவனை செஸ் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அவனது திறமையை மேம்படுத்த ஆரம்பித்தார்.இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ளன. கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வென்ற அவர் தனது முதல் நிலையையும், கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் பிடித்தார். பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டராக, 2ஆயிரத்து 500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். 9ஆவது சுற்றுப் போட்டியில் அவர், ரேட்டிங்கில் 2 ஆயிரத்து 514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2 ஆயிரத்து 500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு, உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில், 2002-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் முதலிடத்தில் உள்ளார்.

பிரக்ஞானந்தாவுக்கு ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ள செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், அவரை விரைவில் சென்னையில் சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

12 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என்று அவர் புகழாரம் சூடியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

2 Responses to சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை: தலைவர்கள் பாராட்டு

 1. சிறுவன் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுக்கள். அவா் உலக செஸ் சாம்பியனகா ஆக வாழ்த்துக்கள்.சு.மோகன சுகுமாா் அறிவியல் கண்டுப்பிடிப்பாளா் சென்னை ஐபிஎல் அணிக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் என பெயாிட்டவா்

 2. Thanks always for the updating the readings.online pharmacy canada

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *