மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட வைரல் வீடியோ

Comments (0) செய்திகள், மருத்துவம், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் கால் உடைந்த பெண் நோயாளி ஒருவர் உறவினர்கள் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை அவரது ஒரு உறவினர்கள் பெட்ஷீட்டில் வைத்து இழுத்து செல்கிறார்கள். கால் உடைந்து போன ஒரு பெண் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் காலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் நடந்து செல்ல முடியாததால் அவருக்கு ஸ்ட்ரெச்சர் தேவைப்பட்டது. ஆனால் அங்கு ஸ்ட்ரெச்சர் இல்லை. இதனால் அவரது உறவினர்கள் பெட்ஷீட்டை வைத்து அவரை மருத்துவமனையின் வளாகத்தில் இழுத்துச் சென்றனர். இதைப் பார்த்த யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.இது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும் போது, பாதிக்கப்பட்ட பென்ணின் உறவினரிடம் 5 நிமிடம் காத்திருக்குமாரு கூறப்பட்டது. ஸ்ட்ரெச்சரில் உள்ளவரை இறக்கி விட்டு வந்து விடுகிறோம் என கூறினோம். ஆனால் அவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லமால் அங்கிருந்து சென்று விட்டார்கள் என கூறினார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் மேற்பார்வையாளர் சந்திரகாந்த் மஸ்ஸ்கே கூறும் போது இதற்கு பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *