அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

Comments (0) கல்வி, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நத்தம் அருகே அரசு உயர்நிலைபள்ளி மாணவ,மாணவிகள் கூடுதல் பள்ளி கட்டிட வசதி கேட்டு வகுப்பு புறக்கணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 197 மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த சில வருடங்களுக்கு முன்பு தரம் உயர்த்தபட்டு எந்த விதமான அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான வகுப்பு அறைகள் இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் மரத்தடியிலும்,கலையரங்க வளாகத்திலும் தங்கி படிக்க கூடிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.பலமுறை இக்கிராமத்தினர் சம்பந்தபட்ட உயர்அதிகாரிகளுக்கும்,கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கூடுதல் பள்ளி கட்டிட வசதி கேட்டு மனுக்கள் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனதால் பள்ளியை புறக்கணிக்க மாணவ&மாணவிகள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளி திறக்கபட்டது. ஆனால் மாணவ&மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியின் முன்பாக அவர்கள் திரண்டு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தை கட்டி தரவேண்டும் என்று மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டு ஒட்டுமொத்தமாக வகுப்பு அறைகளை புறக்கணித்து வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் வகுப்பு அறைகளில் ஆசிரியர்கள் மட்டுமே தனியாக இருந்தனர். தகவலறிந்த நத்தம் ஊரக வளர்ச்சி துறை,வருவாய்துறை காவல்துறை அதிகாரிகள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *