காமராஜர் கொள்கை – கோட்பாடு ஆய்வுமையம் ரூ.3 கோடியில் அமைக்க திட்டம்

Comments (0) அரசியல், கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பெருந்தலைவர் காமராஜரின் கொள்கை மற்றும்கோட்பாடு ஆய்வு மையம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மதுரை காமராஜர் பல்கலை கழகெ வளாகத்தில் அமைய உள்ளது. இது தொடர்பாக சென்னையில் காமராஜர் கொள்கை கோட்டாட்டு அய்வு மையத்தின் நிறுவன தலைவர் திரு.பாபுஜி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது காமராஜர் ஆய்வு மையம் அமைப்பதற்கு மதுரை காமராஜர் பல்கலைகழகம் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை வழங்கி இருப்பதாகவும் இதற்கு பல்கலைகழகத்தின் ஆட்சிமன்றகுழு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் கூறினார். பெருந்தலைவர் காமராஜரின் ஆய்வு இருக்கை அமைப்பதற்கு ரூ. 3 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் இந்த தொகையை அரசு வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி பேரவை தலைவர் திரு ராமசாமி கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.  இந்த இருக்கைக்கு நிதி வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளநிலையில் தங்களது அமைப்பின் சார்பில் உலக தமிழர்களிடம் நிதி பெற்று இந்த இருக்கையை அமைக்க திட்ட மிட்டு இருப்பதாகவும் பாபுஜி கூறினார். இந்த இருக்கைக்கு ரூ.100 முதல் தமிழர்கள் நன்கொடையாக தரலாம் என  அறிவித்தார். அப்போது மூத்த செய்தியாளர் திரு. முகைதீன் கப்பார் என்ற குரும்பூரான் தம்மிடம் இருந்த 200 ரூபாயை முதலாவதாக கொடுத்து ஆய்வு இருக்கை அமைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து செய்தியாளர் திரு.முஸ்தபாவும் தமது பங்களிப்பாக 200 ரூபாயை ஆய்வு மைய நிறுவன தலைவர் பாபுஜியிடம் வழங்கினார். முதன்முறையாக காமராஜர் ஆய்வு இருக்கை அமைவதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்கள் இருவர் முன் உதாரணமாக திகழ்ந்தமைக்காக காமராஜர் ஆய்வு இருக்கை மையத்தின் அனைத்து நிர்வாகிகளும் நன்றி தெரிவித்தனர். மேலும் கல்விக்கண் திறந்த காமராஜரின் கல்வி கொள்கை மற்றும் அரசியல் வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இருக்கை அமைக்கப்படுவதாகவும் இதனால் மாணவ மாணவிகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் எதிர்கால தலைவர்களும் சிறந்த படிப்பினை பெற முடியும் என பாபுஜி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது நிறுவன கணக்காயர் ஜான் மோரிஸ் , நாடார் முரசு ஆசிரியர் ஜூலியன் நாடார்,சங்க பொதுச்செயலர் தங்கமணி உள்ளிட்ட பலர்  உடன் இருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *