வன்னியர் பொது சொத்து பாதுகாப்பு சட்டம்…. தமிழக அரசுக்கு வன்னியர் கூட்டமைப்பு நன்றி அறிவிப்பு

Comments (0) அரசியல், இந்தியா, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (06.05.18) வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.இராமமுர்த்தி பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,வன்னியர் சமுதாய வள்ளல்கள், முன்னோர்கள்,தங்கள் சொத்துக்களை,வன்னியர் சமுதாயத்தினர் பயன்படும் வகையில்,அறக்கட்டளைகளாக,உயிலாக விட்டு சென்றனர்.ஆயிரங்காணி அறக்கட்டளை, பி.ட்..டி செங்கல்வாரயர் அறக்கட்டளை போன்று சுமார் நூறு அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயாகும்.இந்த சொத்துக்களில் பலவும்,முறையான பராமரிப்பு இல்லாமலும்,ஆக்கிரமிப்புகளாலும், வன்னியர் சமுதாயத் தினருக்கு பயன் இல்லாமல் இருந்தன. வன்னியர் சமுதாய மக்கள் பயனடையும் வகையில்,,” – வக்ஃபு வாரியம் போன்று,வன்னியர் பொது சொத்துகளை பாதுகாக்க வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வன்னியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தோம். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துசட்டரீதியாக வாதாடினோம். இப்படி பலவகையிலும்,வன் னியர் கூட்டமைப்பு மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக, தமிழக அரசு 05.06.18 அன்று ,””தமிழ்நாடு வன்னியர் குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலக்கொடைகள் ( பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல் ) சட்டம் 2018 “என்ற சட்டத்தை “சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதற்கு காரணமான,முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,,சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்,பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர், சட்டமன்ற உறுப்ப்னர்கள் அனைவருக்கும்,வன்னியர் சமுதாயத்தின் சார்பில், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியிபோது,வன்னியர் கூடடமைப்பு பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் ,மணிஜோசப்,,செயலாளர்கள் முத்துசாமி,மேச்சேரி,ராமகிருஷ்ணன்,,குமார் உள்ளிட்டோர் டனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *