புற்றுநோயாளிகளுக்கு ஆதரவுகரம் நீட்டும் புதிய திட்டம் அறிமுகம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

புற்றுநோயாளிகளுக்கு  உதவும் விதமாக GLOBAL CANCER CONCERN INDIA என்னும் அமைப்பு தனது 20 ஆண்டுகால சேவையுடன் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து சமூக பணி ஆற்றி வருகிறது, இந்த நிறுவனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மைல்கல்லாக தற்போது நடமாடும் வலிதணிப்பு மற்றும் ஆதரவு சிகிச்சை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அமைச்சர் மாபா.பாண்டி யராஜன் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ஆவடியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பாண்டியராஜன் அரசும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறினார். இந்த நிகழ்வில் 17 மாநிலங்களில் இந்த சேவையை செய்து வரும் தொண்டுநிறுவன அமைப்பின் தலைவர் மருத்துவர் ஹர்விந்தர்சிங் பக் ஷி மற்றும் தமிழக பிரிவின் தலைவர் தாஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *