இலங்கையின் பண்டைய பொலனறுவை நகரம் ஒரு மீள்பார்வை …

Comments (0) உலகம், சுற்றுலா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

* 12 ம் 13 ம் நூற்றாண்டு முதல் பொலனறுவை மிகவும் சிறந்த நகராக விளங்குகிறது. சிதைவடைந்த பௌத்த, இந்து வழிபாட்டு தலங்கள் அரசர்களின் சிறந்த நிர்மாணிப்புக்கள் பல இங்கு காணப்படுகின்றன.
* வரலாற்று பிரசித்திமான இவ்விடத்தை பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதுண்டு. பௌத்த நினைவுச் சின்னங்களாக வட்டதாகே, திவங்க சிலை மனை, ரன்கொத் விகாரை, கிரி விகாரை, லங்காதிலக்க, அரச மாளிகைகள், நிஸங்கலதா மண்டபம் கல் விகாரை, சிவ ஆலயங்கள், சத்மஹல் பிரசாந்த் போன்ற மிகச் சிறந்த நிர்மாணிப்புக்களால் பொலனறுவை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்திமானது.
* இலங்கையில் உள்ள இரண்டாவது புராதான இராசதானியாக பொலனறுவை 1 ம் விஜயபாகு மன்னனது காலத்தில் உள்ளது. 1ம் விஜயபாகு மன்னன் 1070 ல் சோழர்களின் பிடியிலிருந்து நாட்டை மீட்டு பொலனறுவையை தலைநகராக்கி ஆட்சி செய்தார்.
* விவசாய நடவடிக்கைகளுக்காக 2500 ஹெக்டெயர் நிலப் பரப்பில் விசாலமாக பராக்கிரம சமுத்திரத்தை பராக்கிரமபாகு கட்டிவித்தான். பராக்கிரமபாகு மன்னனுக்குப் பின் ஆட்சி செய்த நிஸங்கமல்ல மன்னன் ( 1187 – 1196) பொலன்னறுவையை ராஜதானியாக்கி விவசாயத்தை மேம்படுத்தினான்.
* தற்போதைய சுற்றுலாப் பயணிகளின் பார்வையும் பொலன்னறுவை இராச்சியம் மீது மிகுதியாக விழுந்துள்ளது. இங்கு வருவோர் பொழுதுபோக்கு அம்சங்களோடு வரலாற்றுச் செய்திகளையும் சேகரித்துச் செல்கிறார்கள்.இந்திய ரயில்வே போக்குவரத்து அமைச்சகம் வருகிற நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்த சுற்றுலா பட்டியலில் பொலனறுவை நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *