இலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்

Comments (0) கலை, சுற்றுலா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • download (2)
 • download (3) (1)
 • download (4) (1)
 • images (14)
 • images (18)
 • download (5) (1)
 • download (6) (1)
சிங்கராஜ வனத்திற்கு சொந்தமான காரியாலயத்தில் பிரவேச பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு 2km
தூரம் நடந்தால் சிங்கராஜ வனத்தை அடையலாம்.வனத்துக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வழிகாட்டல் பலகைகளில் உள்ள வழிகாட்டலுக்கமைய செல்லலாம் இலங்கைக்கேயுரிய .27வகையான பறவை இனங்கள் ,22ற்கு மேற்பட்ட விலங்குகள் 3மீனினங்கள்இங்கு காணப்படுகிறது. நான்கு அரிய வகை பாசியினங்கள்,காளான்வகைகள்,ஊர் வன என பலவற்றை காணலாம். கெண்டி அல்லது நெப்பந்திசு என்று அழைக்கப்படும் பூச்சுண்ணி தாவரம் விசேடமானது. சிங்கராஐ வனமானது வரலாற்று ப் பிரசித்தமான இடமாகவும் உள்ளது. குருளு விகாரை எனப்படும் பழமைவாய்ந்த விகாரை இங்குண்டு. இவ்விகாரை கோழியின் தோற்றத்தை போல உள்ளது. சீதாவக்கை இராஜசிங்கன் பௌத்த சாசனத்தை சீரழிவுக்கு உள்ளாககிய போது பலர் இங்கு மறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.இங்கு பாரவையிடக்கூடிய இன்னொரு இடம் வெத்தாகலை. குவேனியும் இரண்டு பிள்ளைகளும் இங்கு ஒழிந்ததாக கூறப்படுகிறது. இங்கு பனாபொல பகுதியில் அதிகளவு கறுவா இருந்தமையால் அதன் மீது மோகம் கொண்டஒல்லாந்தர்கள் இங்கு வந்து குடியேறினர்.இலங்கைக்கே உரிய Bovitiya மலர் இங்கு வருடம் முழுவதும் பூத்துக்குலுங்கும். சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இந்த இடத்தை தெரிவு செய்தால் இயற்கையோடு வரலாற்று பிரதேசங்களையும் அரிய உயிரினங்களையும் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *