பிளஸ் டூ புதிய அறிவிப்பு!

Comments (0) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக, தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையானது, சமீப காலமாக அதிரடியான பல முடிவுகளை எடுத்து வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வழியில் பயின்றுவரும் மாணவ மாணவிகள், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஆகஸ்ட்21) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசாணை எண்.185, பள்ளிக் கல்வித் துறை, நாள் 09.08.2017 இன் படி, பழைய நடைமுறை பாடத்திட்டத்தின் படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற மேற்குறிப்பிட்ட வகை தனித்தேர்வர்களுக்கு தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இருபருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற/வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்.

அரசாணை 1(டி), எண்.573, பள்ளிக்கல்வி துறை, நாள் 03.10.2017 இன் படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லதுஅதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வெழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இதுநாள் வரை நேரடியாக 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடியும். இந்நிலையில், தனித்தேர்வர்கள் நேரடியாக நேரடியாக 12ஆம் வகுப்புத் தேர்வெழுத முடியாது என்ற அறிவிப்பின் மூலம், அவர்கள் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த பிறகே நேரடியாக 12ஆம் வகுப்புத் தேர்வெழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *