முதல் அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேரளாவில் முதல் அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் இயற்கை வளம் மிக்க கேரளா, கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த கன மழையால் சீர்குலைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து பெய்த மழையாலும், அணைகள் திறக்கப்பட்டதாலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 274 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான கால்நடைகளும் பலியாகி இருக்கின்றன.தற்போது மழை குறைந்து இருப்பதால் வெள்ளநீர் வடிய தொடங்கி இருக்கிறது. நிவாரண பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கேரளாவில் முதல் அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்தக்கூட்டத்தில், வெள்ள பாதிப்பு, நிவாரணப்பணிகள் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *