இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா!

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்தியாவின் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. முதலிரண்டு டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இவற்றிலிருந்து கிடைத்த பாடங்களைக் கொண்டு இந்தியா, ட்ரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் மூன்றாவது போட்டியை எதிர்கொள்ளத் தயாரானது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் குவித்தது. இந்தத் தொடரில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். பின்னர் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் துவக்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 103 ரன்களும், ஹர்திக் பாண்டியா 52 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்துக்கு 521 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து, விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருத்தது. இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நெருக்கடியை உண்டாக்கினர். இஷாந்த் ஷர்மாவின் வேகத்தில் தொடக்க வீரர்கள் அலெஸ்டர் குக் 17 ரன்களுக்கும், கீட்டன் ஜென்னிங்ஸ் 13 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட்-ஒல்லி போப் கூட்டணி நிதானமாக ஆடி இங்கிலாந்துக்கு சற்று நம்பிக்கை தந்தது. இவர்களை பும்ரா, ஷமி கூட்டணி அடுத்தடுத்து வெளியேற்றி இங்கிலாந்தின் நம்பிக்கையைத் தகர்த்தனர். சற்று முன்வரை இங்கிலாந்து அணி, 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களுடனும், ஜாஸ் பட்லர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 437 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *