வெள்ள நிவாரண நிதி : மத்திய அரசின் நிலை?

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கேரள வெள்ளத்தை பெருந்துன்பம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய பெருந்துன்பத்திற்கு மட்டுமே நிதி அளிக்கப்படும் என்று தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு பேரழிவை தேசிய பெருந்துன்பம் என்று அறிவிக்க முறையான சட்டங்களோ, விதிகளோ இல்லாததால் மத்திய அரசு நிதி அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மனித சக்தி மற்றும் நாடுகள் அரசுகள் ஆகியவற்றின் சக்தியினாலும் எதி்ர்கொள்ள முடியாத இயற்கை பேரழிவுகளையும் மனிதர்களால் உருவாக்கப்படும் பேரழிவுகளையும் பேரிடர் என்று ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு வரையறை செய்துள்ளது. சுனாமிகள்,பெரிய நில நடுக்கங்கள், பூகம்பங்கள் புயல் உள்ளிட்ட பெரும் இயற்கைப் பேரழிவுகளை பேரிடர் என்று அழைக்கலாம். இந்தியாவில் சுனாமி தாக்கிய பின்னர்தான் பேரிடர் ஆணையமும் அதற்கான சட்டமும் உருவாக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தேசிய மற்றும் மாநில பேரிடர் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

கேரளாவை புரட்டிப்போட்டு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தை தேசிய பேரிடர் என அறிவிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. ஆனால் கேரள வெள்ளத்தை தேசிய பெருந்துன்பம் என அறிவித்துள்ளது. தேசிய பெருந்துன்பத்திற்கு மட்டும் கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும் எனவும் தேசிய பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பிரச்சினையில் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. தேசிய பெருந்துன்பம் என்று அறிவிப்பதற்கு சட்ட விதிகள் இல்லை என்று சட்ட நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையின்படி மாநில அளவில் பேரிடர்களை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட நிதியிலிருந்து நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளலாம்.

பான் மசாலா சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவற்றுக்கு போடும் வரிகளின் மூலமாகவே தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு, நிதி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தற்போது கேரள வெள்ளத்தை தேசிய பெருந்துன்பம் என்று அறிவித்தாலும் அதை அமல்படுத்திட அதற்கான சட்டங்கள் இல்லாததால் இன்னும் கூடுதல் நிதியானது நிதி அளிக்கப்படுவது குறித்து தெளிவற்ற நிலையே நிலவுகிறது. அப்படியே இதை பெருந்துன்பம் என்ற அறிவிப்பை சட்டரீதியாக அறிவித்து அமல்படுத்தினாலும் நிதி எவ்வளவு அளிக்கப்படும் என்பதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசின் நிலையில் ஒரு குழப்பமான நிலையே நீடிக்கிறது.

சில நாட்களுக்கு முன்னதாக முதலில் 100 கோடியும் பின்னர் 500 கோடியும் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *