தோவாளை சந்தையில் பூ விற்பனை மந்தம்!

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விற்பனை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூச்சந்தை உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும் லாரி, டெம்போ மூலம் விற்பனைக்காக வரும் பூக்களை வாங்கிச் செல்ல அதிகாலையிலேயே ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பூக்களை வாங்கிச் செல்வார்கள்.

இந்த வருடம் கனமழையால் கேரள மாநிலம் வரலாறு காணாத பாதிப்பை அடைந்துள்ள நிலையில், ஓணம் பண்டிகையைக் கேரள மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் பூ விற்பனை மந்தமாகியுள்ளது. கடந்த வருடம் 5 கோடி ரூபாயைத் தாண்டி நடைபெற்ற பூக்களின் விற்பனை, இந்த வருடம் 1 கோடி ரூபாயைக் கூட எட்டாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை கேரளாவில் நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக தோவாளைச் சந்தைக்கு கேரளாவிலிருந்து பூக்களை வாங்கிச் செல்ல குறிப்பிடும்படியாக வியாபாரிகள் எவரும் வரவில்லை.

இதுகுறித்து தோவாளையைச் சேர்ந்த நடராஜன் என்ற பூ வியாபாரி பேசுகையில், “ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களை வாங்கிச் செல்ல இங்கு வியாபாரிகள் பலர் வந்து குவிவார்கள். ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் சந்தை களைக்கட்டும். ஆனால், இந்த ஆண்டில் வெள்ளம் காரணமாக பூக்களை வாங்க யாரும் வரவில்லை. முதல் நாளில் சந்தை வெறிச்சோடியே இருந்தது. இன்று ஒன்பதாவது நாள் என்பதால் சில வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர்” என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *