வெள்ளத்திற்கு நிதி திரட்ட சிறப்பு லாட்டரிச் சீட்டு விற்பனை அறிவிப்பு

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கேரளா வெள்ளத்திற்கு நிதி திரட்டும் வகையில் சிறப்பு லாட்டரிச் சீட்டு விற்பனையை அறிவித்துள்ளது.

சுமார் 100 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பேய் மழை வெளுத்துக்கட்டியது. ஆறுகள் கரை புரண்டோடின. அணைகள் நிரம்பி வழிந்தன. வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இப்போது வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது. மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. மாநிலத்திற்கு பெரும் பொருளாதார இழப்பு நேரிட்டுள்ளது. ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநிலத்திற்கு பல்வேறு தரப்பில் உதவி குவிந்து வருகிறது.

கேரளா வெள்ளத்திற்கு நிதி திரட்டும் வகையில் சிறப்பு லாட்டரிச் சீட்டு விற்பனையை அறிவித்துள்ளது. கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு இந்நகர்வை முன்னெடுக்கிறது. மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட சிறப்பு லாட்டரி ஒன்றை விற்பனை செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அஷ்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லாட்டரியானது ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

எத்தனை வரிசைகள் அச்சிடப்பட்ட உள்ளனவோ, அத்தனைக்கும் ரூ 1 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ள இந்த லாட்டரிச் சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்தத் தொகையும் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *