நத்தத்தில் மாணவிகளுக்கான மாவட்ட அளவில் நடந்த கூடைபந்து போட்டி

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி,பட்டிவீரன்பட்டி,நிலக்கோட்டை,வேடசந்தூர்,திண்டுக்கல் மற்றும் சாணார்பட்டி உள்ளிட்ட பல பள்ளிகளை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கூடைபந்து போட்டி நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் நடந்தது-. பள்ளியின் தாளாளர் ராமசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அரசு மேல்நிலைபள்ளி உதவி தலைமையாசிரியை கலைச்செல்வி,கைபந்து கழக மாவட்ட துணை தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 12பேர்கள் கொண்ட குழுவில் 12 அணிகளாக கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் வெற்றி பெற்ற அணிகளை மாவட்ட அளவில் தேர்ந்துஎடுக்கபட்டு அக்டோபர் மாதம் திண்டுக்கல்லில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்குபெறுவார்கள். மொத்தம் 144 மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலைமலை,வசந்தன்,சக்திவேல்,முருகேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *