அணில் நிறுவன அப்பள பாக்கெட்டுகளில் புழுக்கள் பரபரப்பு !

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • அணில் அப்பள 3
அணில் நிறுவன அப்பள பாக்கெட்டுகளில் புழுக்கள் பரபரப்பு !

திண்டுக்கல்லில் பிரபல அணில் நிறுவனத்தின் அப்பள பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விற்பனைக்கு அனுப்பிய 540 கிலோ அப்பளத்தை திரும்ப பெறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே ஒரு பலசரக்கு கடை உள்ளது. இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ், வேடப்பட்டியை சேர்ந்த ஜியாவுதீன் ஆகியோர் சென்றனர். பின்னர் 2 பேரும் தனித்தனியாக அணில் அப்பள பாக்கெட் வாங்கினர். அந்த 2 அப்பள பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். அப்போது அப்பள பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவற்றில் இருந்த பல அப்பளங்களை புழுக்கள் தின்றதால் ஏற்பட்ட துளைகள் இருந்தன. இதையடுத்து 2 பேரும் கடைக்காரரிடம் முறையிட்டனர். இதையடுத்து வேறு அப்பள பாக்கெட்டுகளை எடுத்து பார்த்தனர். அந்த அப்பள பாக்கெட்டுகளிலும் புழுக்கள் இருந்ததை கண்டனர். இந்த தகவல் பரவியதால் த.மு.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சிலர் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அணில் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் அந்த கடைக்கு வந்தனர். உடனே விற்பனை பிரதிநிதிகளிடம், பொதுமக்கள் முறையிட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜனை, செல்போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தனர். இதையடுத்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா, அந்த பலசரக்கு கடைக்கு விரைந்து வந்தார். அங்கு அவரிடம், சின்ராஜ், ஜியாவுதீன் ஆகியோர் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வாங்கிய அப்பள பாக்கெட்டுகளை வாங்கி பார்த்தார். மேலும் கடையில் இருந்த அப்பள பாக் கெட்டுகளை பிரித்து சோதனை செய்தார். அதில் 3 அப்பள பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தார். இதைத்தொடர்ந்து செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள அணில் நிறுவனத்துக்கு சொந்தமான அப்பள குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு இருந்த அப்பள பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். ஆனால், கெட்டுப்போன அப்பள பாக்கெட்டுகள் எதுவும் இல்லை. எனினும், அப்பளத்தில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் கூறுகையில், பலசரக்கு கடையில் பறிமுதல் செய்யப்பட்ட அணில் அப்பள பாக்கெட்டுகளின் தயாரிப்பு பேட்ச் எண் கொண்ட அப்பளங்கள் எதுவும் குடோனில் இல்லை. அந்த பேட்ச் எண் கொண்ட 540 கிலோ அப்பளங்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப பெறும்படி அணில் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறோம். அப்பளங்களை திரும்ப பெற்ற பின்னர் மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படு, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *