உடற்பயிற்சி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உடற்பயிற்சி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் அனுப்பூரில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து உடற்பயிற்சி செய்தார்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூர் கிராமத்தில், இளைஞர்களுக்காக அங்குள்ள அரசு நிலத்தில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்ட முதல்வர் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் உபகரணங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து தானும் சிறிது நேரம் உடற் பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த மைதானத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் பேட்மின்டன் விளையாடினார்.

இதையடுத்து பேசிய முதல்வர், “நகர்ப்புறத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமப்புறத்திலும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அரசு துணை நிற்கும். சேலம் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *