பொங்கலுக்கான ரயில்வே முன்பதிவு: செப்.9 அன்று தொடக்கம்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான தைப் பொங்கல் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும். வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் பொங்கல் பண்டிகையன்று தங்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள். இவ்வாறு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுவதால், சென்னை வெறிச்சோடிக் கிடப்பது வழக்கம். அப்போது, பேருந்துகளிலும் ரயில்களிலும் நிற்கக் கூட இடம் இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ரயில்களில் 120 நாளுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பொங்கல், தீபாவளிப் பயணத்துக்கான இடங்கள், ஆன்லைனில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிடும். வரும் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகை, ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் (திங்கள் கிழமை), ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் என்று தொடர்ந்து பொங்கல் விழா நடைபெறவுள்ளது.இதனையொட்டி, ஜனவரி 11ஆம் தேதிக்கான (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செப்டம்பர் 9ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 10ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 11ஆம் தேதியும் நடைபெறுகிறது. தீபாவளி முன்பதிவானது ஒரு சில நிமிடங்களிலேயே முடிவடைந்துவிட்டதைப் போலவே பொங்கல் முன்பதிவும் சில நிமிடங்களில் முடிவடையும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *