வேலூரில் துணை இயக்குநருக்கு லஞ்சம் வாங்கத் தனி அலுவலகம்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

லஞ்சம் வாங்குவதற்கென தனி அலுவலகம் நடத்தி வந்த வேலூர் மண்டல நகர் ஊரமைப்புத் துணை இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றுக்குக் கட்டட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்து வந்ததாக, சுப்பிரமணியன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் பலர் நேற்றிரவு 7 மணியளவில் துணை இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முறைகேடு செய்திருந்ததை உறுதி செய்யும் ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்தனர்.சுப்பிரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் அவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்ததும், அங்கு தனது அலுவலகப் பணிகளை மேற்கொண்டுவந்ததும் தெரிய வந்தது. அந்த அலுவலகத்தில் 38 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவரது தலைமையில், மற்றவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ.20,000, மற்ற 37 பேருக்கு மாதம் ரூ.10,000, வீட்டு வாடகை மாதம் ரூ.8,000 என்று லஞ்சப் பணத்தில் கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்து வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் சோதனையிட்டபோது, வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டிருந்த பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை, இன்று அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது.

தனி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களைச் சேகரித்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *