ஆலங்குளத்தில் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வரும் சர்வீஸ் உதவி ஆய்வாளர்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் சர்வீஸ் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் லஞ்சம் வாங்குபவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு பதிலாக இவரே லஞ்சம் வாங்குவதில் வல்லவராக திகழ்கிறார் என ஆலங்குளம் வாழ் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்தசில மாதங்களுக்கு முன்னர் உதவி ஆய்வாளர் சுதாகரனை தாக்க முயன்ற பட விநியோகஸ்தர்களை கைது செய்த போது , அவர்களின் காரில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாயக்கும் மேல் உள்ள கரன்சிகளை மாரியப்பன் எடுத்து சென்றார் என கூறப்படுகிறது.இது தொடர்பாக புகார் அளித்தும் அவர் தனது செல்வாக்கை வைதுத தப்பி விட்டார். மேலும் தற்போது வழக்கு ஒன்றில் விசாரணைக்கு வந்த நபரிடம் 2 செல்போன்களை பறித்து வைத்துக்கொண்டு 15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளாராம். இதையடுத்து அந்த இளைஞர் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். மீண்டும் அதே வாலிபரிடம் பணம் கொடு இல்லையென்றால் உன் மீது ஏதாவது வழக்குபோட்டு உள்ளே தள்ளிடுவேன் என மிரட்டல விடுத்து வருகிறாராம். மேலும் உடன் பணிபுரியும் காவல்ர்களிடம் எனக்கு மேலிட செல்வாக்கு உண்டு என கூறுவதுடன் அவர்களையும் மிரட்டி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இதானல் ஆல்ங்குளம் காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக சக காவலர்கள் கூறுகின்றனர். மேலம் இவரிடம் பணத்தை கொடுத்து விட்டு சிலர் திருப்பி கேட்கமுடியாமல் அச்சத்தில் இருப்பதாகவும் சக காவலர்கள தெரிவித்துள்ளனர். ஆதலால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *