சேதுவாய்க்காலில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தூர்வாரும் பணி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் கடம்பா குளத்தை தூர்வரும் பணிகளை தனியார் தாமிர நிறுவனம் மேற்கொண்டது.

தூத்துக்குடி கடம்பா குளம் வழியாக கடலுக்குள் கலக்கும் தண்ணீரை சேதுவாயக்கால் வழியாக ஆத்தூர் குளத்திற்கு கொண்டுசென்று சேர்ப்பதற்கான தூர்வாரும் பணிகளை செய்யவேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் 50 ஆண்டுகள் கழித்து தற்போது தனியார தாமிர தொழிற்சாலை மேற்கொண்டது. இந்த தூர்வாரும் பணிகளுக்காக அரசு அதிகாரிகளடம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தனியார் நிறுவனமான தாமிர தொழிற்சாலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர் . அவர்கள் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டல் இந்த தூர்வாரும் பணி நடைபெற்றது. அதன்படி இந்த தூர்வாரும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பாசனத்தின் மூலம் 4800 ஏக்கர் நிலம் பயனடைகிறது.இது போன்ற நற்பணிகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பொதுமக்கள், ஆலையை மீண்டும் திறந்தால் தங்கள் பகுதி விவசாயிகளுக்கு தேவையான டிஏபி உரங்கள் கிடைப்பதற்க்கும் வழிவகை செய்ய வேண்டும் என ஆலை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *