மலைப்பகுதியில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி என்ற இடத்தில் கடந்த 2008–ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார். 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மாவோயிஸ்டு காளிதாஸ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கொடைக்கானல் போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, விரைவில் மாவோயிஸ்டுகள் அனைவரும் ஒன்று கூடுவோம் என்றார். மேலும் தமிழகத்தில் 25 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகவும் திடுக்கிடும் தகவலை கூறினார்.இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில எம்.எல்.ஏ. உள்பட 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எல்லைகளில் விரைவில் ஆயுத போராட்டம் நடத்தப்படும் என்று, மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மலைக்கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வனப்பகுதிகள், மலைக்கிராமங்களில் சந்தேக நபர்கள் யாரேனும் சுற்றித்திரிகின்றனரா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *