சென்னையில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகக் கூடத்திற்கு சீல்!

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை கிண்டியில் உள்ள ஆசிஃப் பிரியாணி நிறுவனத்தின் உணவு தயாரிப்பு கூடத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகங்களில் ஒன்று ஆசிஃப் பிரியாணி. பல இடங்களில் இந்த உணவகத்திற்குக் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம் சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள உணவுத் தயாரிப்புக் கூடத்திலிருந்து பிரியாணி தயாரித்து, சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பிரியாணியை அனுப்பி வைக்கிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வந்த பல்வேறு புகாரின் அடிப்படையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆசிஃப் பிரியாணி உணவுக் கூடத்துக்கு வந்து, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு உணவகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்திச் சென்றனர்.
ஆனால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறிய விதிமுறைகளைக் கடந்த 3 மாதங்களாக ஆசிஃப் நிறுவனம் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆசிஃப் பிரியாணி உணவுக் கூடத்துக்குச் சென்று இன்று ஆய்வு செய்து உணவகத்துக்கு சீல் வைத்ததோடு, உணவுத் தயாரிப்புக் கூடத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த தொடர் புகார்களை ஏற்று மூன்று முறை ஆய்வு செய்தோம். சுகாதாரமற்ற முறையில் பிரியாணி சமைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, மட்டன் பிரியாணி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. இதையடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளனர். மேலும், ”கிண்டி தவிர பிற இடங்களிலும் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகள் தரமாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *