கொடைக்கானல் அருகே 2 வீடுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள் பொதுமக்கள் அச்சம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொடைக்கானல் அருகே 2 வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தின. காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருகிறது. காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். பகல் நேரங்களில் வனப்பகுதியில் இருக்கும் காட்டுயானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், தோட்டங்களுக் குள்ளும் புகுந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பேத்துப்பாறை குடியிருப்பு அருகே உள்ள தோட்டத்துக்குள் 4 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தன. பின்னர் அவை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ், மங்கப்பன் ஆகியோரின் வீட்டை இடித்து சேதப்படுத்தின. அதுமட்டுமின்றி அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, பலா, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்தன.நேற்று அதிகாலை வரை முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் பின்னர் அருகில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இருந்தபோதிலும் இரவு நேரத்தில் மீண்டும் காட்டுயானைகள் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *