‘செக்கச்சிவந்த வானம்’ பார்த்த ‘பிக் பாஸ்’ டீம்

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக் பாஸ் பிரபலங்கள் சிம்புவுடன் இணைந்து செக்கச்சிவந்த வான படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள செக்கச்சிவந்த வானம் கடந்த வாரம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் இரண்டாவது சீசன் போட்டியாளர்களான ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், மஹத் மற்றும் கடந்த சீசன் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் ஆகியோருடன் இணைந்து தான் நடித்த செக்கச்சிவந்த வானம் படத்தை அக்டோபர் 2ஆம் தேதி இரவு பார்த்துள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.முன்னதாக, பிக் பாஸில் இருந்து வெளியேறிய சென்ட்ராயனும் மஹத்தும் சிம்புவைச் சந்திக்க , சென்ட்ராயனுக்குத் திருமந்திரம் புத்தகத்தைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்திருந்தார் சிம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *