மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன?

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று (அக்டோபர் 9) காலை சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பற்றி நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரையில் அவதூறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.விஐபி லவுஞ்ச்சில் காத்திருந்த நக்கீரன் கோபால்.அப்போது அங்கே சென்ற போலீஸார் (அடையாறு சரகம்) ‘சார் உங்க மேல வந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கணும்’ என்றிருக்கிறார்கள். அங்கேயே ஓர் இடத்தில் நக்கீரன் கோபாலை சுமார் அரைமணி நேரத்தும் மேலாக வைத்திருந்த போலீஸார் திடீரென அவரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்குக் கொண்டுவந்தனர். இதற்குள் நக்கீரன் கோபால் கைது என்ற தகவல் ஊடகங்கள் மூலம் பரவத் தொடங்கியது. அவர் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நிர்மலாதேவியோடு தொடர்புபடுத்தி அவதூறுக் கட்டுரை வெளியிட்டதாக புகார் தரப்பட்டிருக்கிறது என்று காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவித்தார்கள். மேலும் யார் புகார் கொடுத்தது, எங்கே புகார் கொடுக்கப்பட்டது என்ற எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் யாரையும் சந்திக்க விடாமல் தனிமையில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலைப் பார்க்க மதிமுக பொதுச் செயலாளர் அங்கே வந்தார். ஏற்கனவே பத்திரிகையாளர்களும் ஊடக ஒளிப்பதிவாளர்களும் அங்கே திரண்டிருந்தனர். வைகோ வந்தபோது போலீஸார் அவரை சூழ்ந்துகொண்டனர். ‘நான் கட்சித் தலைவராக வரவில்லை. நான் ஒரு வழக்கறிஞர். உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள வரையறைகளின்படி கைது செய்யப்பட்டவரை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்படக் கூடாது. நக்கீரன் கோபாலை சந்திக்க என்னை அனுமதியுங்கள்” என்றார். வைகோ அங்கே வருவார் என்று எதிர்பார்க்காத போலீசார் சட்டென செல்போன் மூலம் மேலிடத்தில் அனுமதி கேட்டனர். யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு வந்ததும் வைகோவிடம் இதை போலீஸார் தெரிவித்தனர். “உச்ச நீதிமன்றம் வகுத்த நெறிமுறைகளுக்கு மாறாக செயல்படும் காவல்துறையினர் மீது நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவேன். காவல்துறையையும், நீதிபதியையும் மிகக் கேவலமாக பேசிய பாஜக நபரை ஆளுநர் அழைத்து விருந்துகொடுக்கிறார். ஆனால் ஒரு பத்திரிகை ஆசிரியரை மிரட்டும் வகையில் கைது செய்திருப்பது கண்டிக்கத் தக்கது. ஆளுநரின் உத்தரவின் பேரில் காவல்துறை செயல்படுகிறது. மத்திய அரசின் ஏஜெண்ட்டான ஆளுநரின் உத்தரவின் படி காவல்துறை செயல்படுவது கண்டிக்கத் தக்கது. இன்று ஒரு பத்திரிகைக்கு ஆபத்து என்று இருந்துவிடாதீர்கள். நாளைக்கு எல்லா பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கு வரும்” என்று கூறிய வைகோ அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தார். அவரோடு பத்திரிகையாளர்களும் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது வைகோவை போலீசார் கைது செய்து உடனே அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *