பழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  


அரசுப் பேருந்துகளின் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பழனியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் என்பவர், பழனியில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும், பெரும்பாலான பேருந்துகளில் ஷட்டர், பிரேக் போன்ற எதுவும் இல்லாமல் இருக்கின்றன என்றும், தனது வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டார். “மழையின்போது பேருந்துக்குள் மழைநீர் கொட்டும். ஒருநாள், ஒழுகும் நீரில் 4 மணி நேரம் பேருந்தை இயக்கி வந்தேன். பணிமனை அதிகாரிகள் பேருந்துகளின் நிலை குறித்து கவலைப்படுவதில்லை” என்று அதில் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், அரசுப் பேருந்துகள் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறாகச் செய்தி பரப்பியதாகவும், பயணிகளிடம் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மண்டல ஒழுங்கு நடவடிக்கைத் துறை மேலாளர், இந்த பணியிடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *