தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு

Comments (0) உலகம், கலை, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தைபேயில் உள்ள தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்(National Taiwan University of Science and Technology) நடைபெற்றது. இதில் ‘சங்கச் சுவை’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் புகழ் பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார். அவர் தன் உரையில் அகநானுறு புறநானூறு பற்றி கூறுகையில் இரண்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு பாடல்களை கொண்டது. இந்த நானூறு பாடல்கள் மட்டும் அல்லாமல் மேலும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் இருந்திருக்கலாம். அவைகள் நமக்கு இப்பொழுது கிடைக்காமலே போய்விட்டது என்றார். சங்கப்பாடல்கள் முதன் முதலில் படிக்கும் போது புரியாது. ஆனால் படிக்கப் படிக்க பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றார். தனக்கு பிடித்த சங்கப்பாடல்கள் என்ற வரிசையில் நற்றினை பாடல்களை கூறி அதனை அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்தி சிறப்புரையாற்றினார். திருமதி. இந்திரா பாண்டியன் அவர்கள் “கங்கை கொண்ட சோழன்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ராஜேந்திர சோழனின் கன்னிப்போரை பற்றிய செய்தியானது கல்வெட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சோழ தூதுவனை சேர மன்னன் சிறையில் இருந்து மீட்கும் பொருட்டு நடைபெற்ற போரில் 18 தளபதிகளின் தலை கொய்து தூதுவனை சிறைமீட்டதை கல்வெட்டில் உள்ள பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. மேலும் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமர்ந்த பின்னரே சோழ சாம்ராஜ்யமானது கடல் கடந்தும் விரிந்துசென்றது. அவருடைய கப்பல் படையானது திட்டமிட்டு பல துறைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட பிரமாண்டமான கப்பல்படைகளைக் கொண்டே இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, கடாரம், ஜாவா, சுமத்திரா ஆகிய நாடுகளை பிடித்தார். தன்னுடைய சிறப்புரைக்கு தேவையான தகவல்களை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் “கங்கைகொண்ட சோழன்” புத்தகத்தில் இருந்து எடுத்தாண்டதாக குறிப்பிட்டார்.கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தைபேயில் உள்ள தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்(National Taiwan University of Science and Technology) நடைபெற்றது. இதில் ‘சங்கச் சுவை’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் புகழ் பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார். அவர் தன் உரையில் அகநானுறு புறநானூறு பற்றி கூறுகையில் இரண்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு பாடல்களை கொண்டது. இந்த நானூறு பாடல்கள் மட்டும் அல்லாமல் மேலும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் இருந்திருக்கலாம். அவைகள் நமக்கு இப்பொழுது கிடைக்காமலே போய்விட்டது என்றார். சங்கப்பாடல்கள் முதன் முதலில் படிக்கும் போது புரியாது. ஆனால் படிக்கப் படிக்க பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றார். தனக்கு பிடித்த சங்கப்பாடல்கள் என்ற வரிசையில் நற்றினை பாடல்களை கூறி அதனை அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்தி சிறப்புரையாற்றினார். திருமதி. இந்திரா பாண்டியன் அவர்கள் “கங்கை கொண்ட சோழன்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ராஜேந்திர சோழனின் கன்னிப்போரை பற்றிய செய்தியானது கல்வெட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சோழ தூதுவனை சேர மன்னன் சிறையில் இருந்து மீட்கும் பொருட்டு நடைபெற்ற போரில் 18 தளபதிகளின் தலை கொய்து தூதுவனை சிறைமீட்டதை கல்வெட்டில் உள்ள பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. மேலும் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமர்ந்த பின்னரே சோழ சாம்ராஜ்யமானது கடல் கடந்தும் விரிந்துசென்றது. அவருடைய கப்பல் படையானது திட்டமிட்டு பல துறைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட பிரமாண்டமான கப்பல்படைகளைக் கொண்டே இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, கடாரம், ஜாவா, சுமத்திரா ஆகிய நாடுகளை பிடித்தார். தன்னுடைய சிறப்புரைக்கு தேவையான தகவல்களை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் “கங்கைகொண்ட சோழன்” புத்தகத்தில் இருந்து எடுத்தாண்டதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *