உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உள்ளாட்சி தேர்தல் வழக்குகளில் இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக,மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.2017 நவம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வார்டு மறுவரையறை பணிகளால் தேர்தலை நடத்த முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த மாநிலம் தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறியது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *