கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை. போலிஸ் விசாரனை.

Comments (1) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை மாதவரத்தில் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு

 • WhatsApp Image 2018-12-15 at 18.37.27 (3)
 • WhatsApp Image 2018-12-15 at 18.37.27 (5)
. போலிஸ் விசாரனை.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். விவசாயியான இவரது ஓரே மகள் சென்பகதேவி(18)
இந்நிலையில் தனது மகளை மிகவும் செல்லமாக வளர்த்து வந்த முத்துகிருஷ்ணன் +2வரை அவரை தனது சொந்த ஊரிலேயே படிக்க வைத்தார். பி்ன்னர் விவசாயியானஅவர் தனது மகளும் விவசாயம் சம்பந்தப்பட்ட கல்வி பயில வேண்டும் என்று எண்ணி சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள தோட்டகலை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சென்பகதேவியின் தோழிகள் கல்லூரி வகுப்பை முடித்து விட்டு விடுதி திரும்பியபோது விடுதி அறையில் சென்பகதேவி மின்விசியில் தூக்கிட்டு தொங்கியவாறு இறந்த நிலையில் காணப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் இது குறித்து விடுதி வார்டனிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் சென்பகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து சக மாணவியரிடம் விசாரித்தபோது நேற்று காலையில் இருந்து தனக்கு வயிறு வலிப்பதாகவும் அதனால் இன்று கல்லூரிக்கு வரவில்லை விடுதி அறையிலேயே ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் தாங்கள் கல்லூரி முடித்து திரும்ப வந்தபோது இந்த துயரசம்பவம் நிகழ்ந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாக அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து அவரது தந்தைக்கு தகவல்அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை வந்த அவரும் அவரது உறவினர்களும் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சென்பகதேவியின் உடலினை கண்டு கதறி அமுதனர். பின்னர் அவர் பயின்ற தோட்டகலை கல்லூரிக்கு சென்றபோது கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படடுள்ளதாகவும் விடுதியிலிருந்த மாணவிகள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டதாவும் காவலாளி தெரிவித்தார். இதனையடுத்து மாதவரம் பால்பண்ணை காவல்நிலையம் சென்ற அவர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் மனு ஓன்றினை காவல் ஆய்வாளர்ரிடம் அளித்தார். அதில் எனது மகள் மரணத்தில் மர்மம் இருப்தாகவும் விடுதி வார்டன் சென்னை ஆவடியை சேர்ந்த மூன்றாம் பிறை என்ற பெண் நபரிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என புகார் அளித்தார். புகாரினை பெற்று கொண்ட மாதவரம் பால்பண்ணை காவல்துறை போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

One Response to கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை. போலிஸ் விசாரனை.

 1. Dhanasekar says:

  மாணவி தற்கொலையில் சந்தேகம் உள்ளது. பொதுவாக போலீஸ் எப்போதும் 174-ல் வயிற்று வலி என்றுதான் புகார் எழுதி வாங்குவார்ள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *