செங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டுறவு விற்பனை சங்க தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டுறவு விற்பனை சங்க தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி….

சென்னை செங்குன்றத்தில் உள்ள சைதாபேட்டை தாலூக்கா தொடக்க வோளன்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 8 இயக்குநர்களை தேர்வு செய்வதற்க்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 10ந்தேதி கூட்டுறவு சங்க வாளகத்தில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மறுநாள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாதென அ.தி.மு.க வை சேர்ந்த சௌந்திராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். இதனால் வாக்கு எண்ணிக்கை தொடரமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டு தடை உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை கூட்டுறவு சங்க சார்பாதிவாளர் சன்முகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 6 பேர் (புஷ்பராணி. தேன்மொழி. ரமேஷ். அந்தோனி. சூசைராஜ். ராஜ்குமார்ஆகியோர் அமோக வெற்றிபெற்றனர். மேலும் அ.தி.மு.கவினை சேர்ந்த பெண் வேட்பாளர்கள் பாப்பம்மாள். சாந்தம்மாள் ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 6ஆண் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்நிலையில் இச்சங்கத்திற்க்கான தலைவர் மற்றும் து.தலைவர்கான தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெறும் எனவும் அன்றைய தினமே தலைவர் மற்றும் து.தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கபடுவர்கள் என தெரிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையை ஓட்டி புழல் உதவி ஆணையர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் நட்ராஜ் தலைமையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *