கொடைக்கானலில் கிலோ 15 ரூபாய் ஆரஞ்சு பழம் – விவசாயிகள் வருத்தம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திண்டுக்கல் மாவட்டம் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெருமாள்மலை போன்ற பகுதிகளில் ஆரஞ்சு அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த டிசம்பர் மாதங்களில் ஆரஞ்சு அறுவடைக்கு தயாராக இருக்கும். மேலும் மலை பகுதிகளில் விளையக்கூடிய தனிச்சுவைமிக்க இந்த ஆரஞ்சு பழங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணமுடைய வைட்டமின் சி இருப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். ஆனால் தற்போது ஆரஞ்சு பழங்கள் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த ஆரஞ்சு பழமானது சந்தைகளில் 1 கிலோ 15 ரூபாய் முதல் 20 வரை குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் கீழ்மலை கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *