துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (டிசம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன். அப்போது, தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 690 கி.மீ. தொலைவில் உள்ளதாகத் தெரிவித்தார். “கடந்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சுமார் 260 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது. மணிக்கு 11 கி.மீ. என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும்போது ‘பெதாய்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.

இந்த புயல் நாளை மறுநாள் (டிசம்பர் 17) பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் – காக்கி நாடா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் (டிசம்பர் 16) வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார் பாலச்சந்திரன்.

தரைக்காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், டிசம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி, புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *