ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை வரை அவகாசம்

Comments (0) கல்வி, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அடுத்த அம்சமாக, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 447 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்களது பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த பணியிடங்களுக்கு விருப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு, காலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேர் பணிக்குத் திரும்பியிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்கக் கல்வித்துறையில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 836 ஆசிரியர்களில் 50 ஆயிரத்து 288 பேர் மட்டுமே பணி செய்கின்றனர். 4341 பேர் அனுமதி பெற்று விடுப்பில் இருப்பதாகவும், 96 ஆயிரத்து 207 பேர் அனுமதியின்றி விடுமுறை எடுத்துள்ளதாகவும் தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல இயங்கியதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சென்னையில் ஆசிரியர்கள் 12 பேரும், காஞ்சிபுரத்தில் 11 பேரும், திருவள்ளூரில் 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்வித்துறை கூறியுள்ளது.இதனிடையே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக வேறு வழியின்றியே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்களை எடுத்து கூறப்பட்டுள்ளது என்றார். மாநில அரசின் வருவாயில் 29 சதவீதம் மட்டுமே நல திட்டங்களுக்கு செலவிடப்படுவதாகக் கூறிய அவர் மீதமுள்ள 71 சதவீதம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நிர்வாகச் செலவு மற்றும் கடனுக்கான வட்டிக்கு செலவிடப்படுகிறது என்றார்.போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *