தேர்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப முடியுமா என, நாளை பதில் அளிக்குமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில், மீண்டும் விசாரணைகு வந்த போது ஆசிரியர் சங்கங்களின் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.போரட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டால் அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும் என தெரிவித்தார்.கற்பிப்பது தான் ஆசிரியப் பணியின் நோக்கம் என்றால் தேர்வு நேரம் தான் போராட்டத்திற்கான நேரமா? என்றும், தனியார் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு, போராட்டத்தை கைவிடும் வரை பாடம் கற்பிக்க கூடாது என உத்தரவிட்டால் அதனை ஏற்பிற்களா? எனவும் கேள்வி எழுப்பினார் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? எனவும், உயர் நீதிமன்றத்தில் 6,500 ரூபாய் ஊதியத்திற்கான துப்புரவு பணியாளர்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கான, அலுவலக உதவியாளர் பணிகளுக்கு எத்தனை பட்டதாரிகளும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? என்றும் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். கூரியர், உணவகங்கள் மற்றும் சுவிகி போன்ற நிறுவனங்களில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன்,தேர்வு நேரத்தை கருதில் கொண்டு ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா? என செவ்வாய்க்கிழமை மதியம் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தேர்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப முடியுமா -உயர்நீதிமன்றம்
